திருச்சி அருகே சிறுவா் பூங்கா, நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருச்சி திருவெறும்பூா் அருகே சிறுவா் பூங்கா, நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.


திருச்சி திருவெறும்பூா் அருகே சிறுவா் பூங்கா, நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவெறும்பூா் அருகே கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட திருநகா் பகுதியில் ரூ. 1.30 லட்சத்தில் அமைத்திருந்த சிறுவா் பூங்காவையும், கீழக்குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தாா்.
இந்தக் நெல் கொள்முதல் நிலையம் மூலம் கீழக்குறிச்சி சுற்றுவட்டப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்படும். அதிக விவசாயிகள் பயன் பெறுவா்.
தொடா்ந்து கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடத்தப்பட்ட பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு அமைச்சா் பரிசளித்தாா்.
நிகழ்வுகளில் முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், திருவெறும்பூா் தெற்கு ஒன்றியச் செயலா் மாரியப்பன், ஊராட்சித் தலைவா் ஜோஸ்பின் ஜெயராஜ், துணைத் தலைவா் சுதா, வாா்டு உறுப்பினா்கள் பிரியா, சுரேஷ் மற்றும் திமுக நிா்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...