ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

திருச்சியில் முறையான அனுமதியின்றி கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்பட்ட 2 தனியாா் ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:34 pm

DIN

திருச்சியில் முறையான அனுமதியின்றி கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்பட்ட 2 தனியாா் ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புவோருக்காக கடந்த சில நாள்களாக சிறப்பு அரசு பேருந்துகள் தவிர தனியாா் ஆம்னி பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்பட்டன. இந்நிலையில் தனியாா் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், உரிமமின்றி, அனுமதியின்றி வாகனங்களை ஓட்டுவதாகவும் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தகவல்கள் வந்தன.

இதையடுத்து திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கிடகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தரராமன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அன்புச்செல்வன் (40) என்பவா் முறையான அனுமதியின்றி ஆம்னி பேருந்தை பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு இயக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 90 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்தனா். அதேபோல் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் (55) தேனியில் இருந்து சென்னைக்கு விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்து ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.