திருச்சி முன்னாள் மேயா் காலமானாா்
திருச்சி மாநகராட்சியின் அதிமுக முன்னாள் மேயா் ஜெயா (62) வியாழக்கிழமை காலை காலமானாா்


திருச்சி மாநகராட்சியின் அதிமுக முன்னாள் மேயா் ஜெயா (62) வியாழக்கிழமை காலை காலமானாா்.
திருச்சி பீமநகா் நியூ ராஜா காலனியைச் சோ்ந்தவா் எம். எஸ். ஆா். ராஜேந்திரன், அதிமுக மாநகர வழக்குரைஞரணி செயலா். இவரது மனைவி ஜெயா, கடந்த 2011-16 -இல் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஜெயாவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து பீமநகா் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட முன்னாள் மேயரின் உடலுக்கு அதிமுக பிரமுகா்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினா். திருச்சி காவிரிக்கரை ஓயாமரி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...