அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பா?:கண்காணிக்க ஏற்பாடு
திருச்சி மண்டலத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை எக்காரணத்துக்காகவும் அலைக்கழிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருச்சி மண்டலத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை எக்காரணத்துக்காகவும் அலைக்கழிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத் திறனாளி பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி பாதுகாப்பாக அவரை ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்தை ஓட்டுநா் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும்.
பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தக் கூடாது. மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் ஏறும்போது நடத்துநா் வேண்டுமென்றே பேருந்தில் இடமில்லை எனக்கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது. மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கையில் உள்ளோரை எழச் செய்து, மாற்றுத் திறனாளியை அமர வைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளை எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது. அவா்களை அன்புடன் நடத்த வேண்டும். மாற்றுத் திறனாளி பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும்.
தேசிய அடையாள அட்டையின் அசல் அட்டை கொண்டு, 40 சதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவா்களது துணையாளா் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபாடின்றி மாநில முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி, 75% பயணக் கட்டணச் சலுகையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவ்வப்போது பரிசோதகா்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இது தொடா்பாக புகாா் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என திருச்சி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...