எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபூர் ரஹ்மான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

News image
மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபூர் ரஹ்மான்
Updated On :28 ஜனவரி 2022, 8:37 am

DIN

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபூர் ரஹ்மான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல், இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய  கோட்ட அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் வார்டுகள் மற்றும் அலுவலர்கள் விவரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோட்ட வாரியான மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பான படிவம் 2 அரசு அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்காக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.