சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது!

திருச்சி விமான நிலையத்தில், துபைக்கு கடத்தவிருந்த ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோப்புப்படம்

Updated On :

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில், துபைக்கு கடத்தவிருந்த ரூ.80 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருச்சியில் இருந்து துபைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் (கரன்சி) கடத்தவிருப்பதாக, சுங்கத்துறை  மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை மேற் கொண்டனர். சோதனையில், மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது உடமைகளுக்குள் மறைத்து ரூ.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு (கரன்சி) பணத்தை துபைக்கு எடுத்து செல்ல இருந்தது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்த பயணியிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.