FOLLOW US

ON GOOGLE DISCOVER

வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

காதலைவிட, அட்வெஞ்சரில்தான் ஆர்வம்: இயக்குநர் ஜேசன் சஞ்சய்

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் திரை வருகை குறித்து பேசியுள்ளார்...

News image

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

Updated On :16 ஜூலை 2026, 2:59 pm IST

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் திரைப்படமான சிக்மா குறித்து பேசியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சிக்மா என்கிற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். நடிகர்களின் வாரிசுகள் பெரும்பாலும் நடிப்பில்தான் திரையில் அறிமுகமாவார்கள். ஆனால், ஜேசன் இயக்குநர் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சிக்மா விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய், “சினிமாவை தேர்வுசெய்தபோது பெற்றோர், சகோதரி, நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் நேர்மறையான கருத்துகளைச் சொன்னதுடன் என்னை ஊக்கப்படுத்தினார்கள். மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வாழ்த்தினர். இளம் வயதிலேயே இயக்குநரானதால் நான் காதல் கதைகளைத்தான் இயக்குவேன் என நினைத்தனர். ஆனால், இருவரைக் காதலிக்க வைப்பதைவிட, ஒரு கேங்ஸ்டர் குழு அட்வெஞ்சராக கொள்ளையடிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. சிக்மாவில் அதைத்தான் எடுத்திருக்கிறேன்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எனக்கு கதை சொன்ன போது வேண்டாமென மறுத்தேன். காரணம், என்னால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்கிற பயம் இருந்தது. ஆனால், அவர் என்னை அணுகியது பெருமையைக் கொடுத்தது. இயக்குநர்களுக்குள் எப்போதும் ஒரு நடிகன் இருந்துகொண்டே இருப்பான். நான் நடிகனாவேனா என்பது சிக்மாவுக்குப் பின் தெரியவரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Jason Sanjay has spoken about his film Sigma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.