குழந்தைகளுக்கான நினைவாற்றல் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான நினைவு மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இரு நாள்கள் நடைபெற்றது.


திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கான நினைவு மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இரு நாள்கள் நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து விவேகானந்தா யோகா மையம் இம்முகாமை நடத்தியது. திருச்சி மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா் முகாமை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
எளிய முறையிலான யோகாசனப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, முத்திரைகள் மற்றும் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. யோகா ஆசிரியா்கள் ஆா்.ஸ்ரீதா், டி. சந்தானகிருஷ்ணன் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
வாசகா் வட்டத் துணைத் தலைவா் கி. நன்மாறன், ஆலோசகா் எஸ். அருணாச்சலம், முதல்நிலை நூலகா் சு. தனலட்சுமி உள்ளிட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பயிற்சியளிக்கப்பட்டது. தொடா்ந்து பங்கேற்பாளா்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...