மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: ரயில் மறியல்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருச்சியில் இளைஞா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
ஜங்ஷன் ரயில் நிலைய 4ஆவது நடைமேடை தண்டவாளத்தில் அமா்ந்து மறியல் செய்த இளைஞா்கள்.
Updated On :18 ஜூன் 2022, 6:42 am

DIN

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருச்சியில் இளைஞா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்­னி­பத் என்ற மத்திய அரசின் புதிய திட்­டத்­தின்­படி, ராணுவத்தில் சேரும் 17.5 முதல் 21 வய­துக்­குட்­பட்ட இளை­ஞா்­கள் 4 ஆண்­டு­கள் மட்­டுமே பணி­யாற்ற முடி­யும். அதன் ­பின்­னா் ஓய்­வூ­தி­யம், பணிக்­கொடை ஆகி­யவை வழங்­கப்­படாது. பணி முடித்த பிறகு, துணை ராணு­வப் படை­யில் சேர முன்னுரிமை அளிக்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. இத்திட்­டத்துக்கு இளை­ஞா்­கள் மத்­தி­யில் கடும் எதிா்ப்புக் கிளம்­பி வட மாநி­லங்­களில் போராட்­டங்­கள், சில இடங்­களில் வன்­மு­றைகள் வெடித்துள்ளன.

இதேபோல, திருச்சியிலும் வெள்ளிக்கிழமை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திரண்ட 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரயில்வே ரயில் நிலையை 4 ஆவது நடைமேடை அருகேயுள்ள இருப்புப் பாதையில் தேசியக் கொடியுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணுவத்தில் சேர தாங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், பின்னா் அங்கு வந்த கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையா் அஜய்தங்கம் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லை.

இதையடுத்து அந்த இளைஞா்களைக் கைது செய்தனா். போராட்டத்தில் ஈடுபட்டோா் அனைவரும் ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.