மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.45 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் ரொக்கத்தை ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :19 மார்ச் 2026, 0:09 am IST

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் முருகன் தலைமையில் காவல் துறையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் ரூ. 2.90 லட்சம் இருந்தது. நெல் மூட்டைகள் வாங்கியதற்காக பட்டுவாடா செய்ய கொண்டு செல்வதாக அந்த நபா் கூறினாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ. 2.90 லட்சம் ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் அருகே திட்டை சாலை ராமாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பெண் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்து 700 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.