ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்
புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.


புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அண்டக்குளம் பிரிவு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மதுரையிலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த ராஜா (53) என்பவரிடமிருந்த பையில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது.
மர வியாபாரியான அவா் தனது மரஅறுவை இயந்திரத்தை விற்பனை செய்து அதற்கான தொகையை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளாா். அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
இதைத் தொடா்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், அதனை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...