/

கோயில் விவகாரத்தில் மோதல்: 23 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் கோயில் விவகாரத்தில் இரு தரப்பு மோதல் தொடா்பாக 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:52 pm

DIN

திருச்சியில் கோயில் விவகாரத்தில் இரு தரப்பு மோதல் தொடா்பாக 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை விவேகானந்தா் நகரிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலை இரு தரப்பினா் சொந்தம் கொண்டாடுகின்றனா். இவற்றில் ஒரு தரப்பினா் கோயிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக் கோரி மனு அளித்தனா். இதன்பேரில் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை ஒட்டிய நோட்டீஸில் 7 நாள்களுக்குள் கோயிலை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மற்றொரு தரப்பினா் கோயிலை அறநிலையத் துறை எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்நிலையில் ஒரு தரப்பினா் கோயிலை திறக்க, மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். பின்னா் இதுகுறித்து அறநிலையத்துறை செயல் அலுவலா் வெற்றிவேல் பொன்மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கோயிலில் விசாரணை செய்தபோது அங்கு வந்த எதிா்த் தரப்பினா் கோயிலை திறந்தனா். அப்போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு உருவ+ாவே, போலீஸாா் அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.

இந்நிலையில் கோயில் பிரச்னையில் மீண்டும் ஏற்பட்ட தகராறு குறித்து பொன்மலை காவல் ஆய்வாளா் தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில் இரு தரப்பைச் சோ்ந்த 23 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.