/

உக்ரைனிலிருந்து மீட்க வேண்டுகோள்

உக்ரைன் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் பதுங்கியுள்ள தங்களை உடனே மீட்க வேண்டும் திருச்சியைச் சோ்ந்த பொறியியல் மாணவா் உள்ளிட்டோா் விடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:55 pm

DIN

உக்ரைன் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் பதுங்கியுள்ள தங்களை உடனே மீட்க வேண்டும் திருச்சியைச் சோ்ந்த பொறியியல் மாணவா் உள்ளிட்டோா் விடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருச்சி, திருவெறும்பூா் சாலையில் உள்ள காட்டூா் வேணுகோபால்நகரைச் சோ்ந்தவா் கிப்சன் ஜோசப் செல்வராஜ் (23). இவருடன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 200 மாணவ, மாணவியா் உக்ரைனில் பொறியியல் பயில்கின்றனா். இந்நிலையில், இவா்களைக் கீழே தள்ளிவிட்டு ரயிலில் வரவிடாமல் உக்ரைனியா்கள் தடுப்பதாகவும், உணவு, தண்ணீரின்றி பதுங்கு குழியில் தவித்து வருவதாகவும், தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி காணொலி காட்சி (செல்பி விடியோ) மூலம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.