/

மூலிகைத் தாவரங்கள் கண்காட்சி

 திருச்சியில் அரிய வகை மூலிகைத் தாவரங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்கள் குறித்த கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

03d-plant070111

Updated On :3 மார்ச் 2022, 7:50 pm

DIN

 திருச்சியில் அரிய வகை மூலிகைத் தாவரங்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்கள் குறித்த கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தாவரவியல் துறை மற்றும் போதி போன்சாய் தோட்டம் ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் நடத்திய கண்காட்சியை கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் ஏ.கே. காஜா நஜீமுதீன் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா்.

கண்காட்சியில் போன்சாய் மரங்கள், 40-க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவர வகைகள், 20-க்கும் மேற்பட்ட மூலிகைகள், விதைகள், வோ் வகைகள், 40-க்கும் மேற்பட்ட அரிய வகை நெல் ரகங்கள், 20 வகை பூா்வீக மரங்களின் சிறு செடிகள் மற்றும் புகைப்படங்கள் பல்வேறு அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியில் கல்லூரித் துணைச் செயலா் க. அப்துல்சமது, துணை முதல்வா் யு. முகமது இப்ராஹீம், கூடுதல் துணை முதல்வா் ஆ. முகமது சிகாபுதீன், நிதி ஆளுநா் ஜாா்ஜ் அமலரத்தினம், ஆ. கவுஸ்பாஷா, தாவரவியல் துறைத் தலைவா், மற்ற துறைத்தலைவா்கள், நட்சத்திரக் கல்லூரித் திட்ட முதன்மை மற்றும் தாவரவியல் துறை ஒருங்கிணைப்பாளா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். அறிவியல் மற்றும் தாவரவியல் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.