எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்சி: வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி தொடக்கம் 

திருச்சியில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த வாகன புகைப்பட கண்காட்சி திங்கட்கிழமை தொடங்கியது. 

News image
திருச்சியில் தொடங்கியது வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி.
Updated On :7 மார்ச் 2022, 6:21 am

DIN

திருச்சியில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த வாகன புகைப்பட கண்காட்சி திங்கட்கிழமை தொடங்கியது. 

திருச்சிராப்பள்ளி ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த குளிரூட்டப்பட்ட அரசுப்  பேருந்தில் வடிவமைக்கப்பட்ட  புகைப்படக் கண்காட்சியினைப்  பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.  

திருச்சி மாவட்டத்தில் இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் மார்ச் 12 வரை 6 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், பள்ளித் தலைமையாசிரியர் சைமன் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.