மலைக்கோட்டை கோயிலில் தெப்பத் திருவிழா
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பத் திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பத் திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றம், நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு விசேஷ அபிஷேகம், மாலை 5 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்துக்கு புறப்பட்டு தெப்பக்குளத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் இரவு 7 மணி முதல் சுவாமி, அம்பாள் 5 சுற்றுகளாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதற்காக மலைக்கோட்டை முழுவதும் வண்ண மின்னொளியால் ஒளிரச் செய்யப்பட்டிருந்தது. விழாவையொட்டி சிறப்பு திருமுறை இன்னிசை, நாதஸ்வர இன்னிசை நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ். செல்வராஜ், உதவி ஆணையா் த. விஜயராணி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்தனா். விழாவின் இறுதியாக வெள்ளிக்கிழமை காலை திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெறவுள்ளது. இரவு சண்டிகேஸ்வரா் புறப்பாடு நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...