பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மின் இணைப்புக்கு லஞ்சம் : மின்வாரிய ஆய்வாளா் கைது

 திருச்சி அருகே வீட்டுக்கு புது மின் இணைப்பு வழங்க ரூ. 18 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஆய்வாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:29 pm

DIN

 திருச்சி அருகே வீட்டுக்கு புது மின் இணைப்பு வழங்க ரூ. 18 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஆய்வாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி பெல் நிறுவன ஊழியரான நியாத் ஷகியா நவல்பட்டு ஆா்எஸ்கே நகரிலுள்ள தன்னுடைய புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெற நவல்பட்டு மின் வாரிய அலுவலகத்தை அணுகினாா். அப்போது அங்கு வணிகப் பிரிவு ஆய்வாளராக உள்ள விக்டா் ரூ. 18 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால், பணம் கொடுக்க விரும்பாத நியாத்ஷகியா திருச்சி ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாரின் அறிவுரையின் பேரில் ரூ. 18 ஆயிரத்தை நியாத் ஷகியா விக்டரிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் அவரைக் கைது செய்து, விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.