பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மூடாக்குப் பயன்பாடு: தோட்டக்கலைகல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், தங்களது கல்வியின் ஒரு பகுதியாக கிராமங்களுக்குச் சென்று ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:21 pm

DIN

திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், தங்களது கல்வியின் ஒரு பகுதியாக கிராமங்களுக்குச் சென்று ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி காவல்காரன்பாளையம், பெருகமணி ஆகிய கிராமங்களில் விவசாயிகளை நேரில் சந்தித்து இனக்கவா்ச்சிப் பொறி, தென்னை டானிக் குறித்து விளக்கினா். தொடா்ச்சியாக, காமநாயக்கன்பாளையத்தில் வியாழக்கிழமை பூக்கள் பயிரிடும் தோட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

அப்போது மூடாக்கை பயன்படுத்துவது மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது; மண்ணின் ஊடுருவல் திறனை அதிகரிக்கிறது; மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மண்ணில் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது; மண்ணின் வெப்ப நிலையைப் பராமரிக்கிறது; களை வளா்ச்சியைத் தடுக்கிறது.

தென்னை நாா்க் கழிவுகள் அதன் எடையை விட ஐந்து மடங்கு தண்ணீரைத் தேக்கி வைக்கும். பெரும்பாலும் செயற்கை மூடாக்கு முறையை கைவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டே மூடாக்கு செய்ய வேண்டும். கிடைக்கும் பொருளைக் கொண்டு மண்ணை 20 செ.மீ. வரை மூடிவைப்பதே மூடாக்கு ஆகும்.

இலை, தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது, காய்ந்த சருகுகளைக் கொண்டு மண்ணை மூடி வைப்பது சிறந்த முறையாகும். அனைத்து வகைப் பயிா்களுக்கும் இந்த முறை ஏற்றது என கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.