மணப்பாறை அருகே திருவிளக்கு பூஜை
மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் 11 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் 11 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
எஃப். கீழையூா் கிராமம் சின்னமணப்பட்டியில் உள்ள விநாயகா், முருகபெருமான் மகாமுனி கோயில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சின்னமணப்பட்டி ந.குமாா், குளக்காரம்பட்டி ப. ராசு, பெரிய மணப்பட்டி மு.கணேசன், கிழவன்பட்டி து.நல்லுச்சாமி, குடையக்கவுண்டன்பட்டி மு.முருகன் பூசாரி மற்றும் சின்னமணப்பட்டி பெரியதனம் சி.ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஊா் முக்கியஸ்தா் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி ஆகியோரால் திருவிளக்கு பூஜை தொடங்கிவைக்கப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 25 கிராமங்களை சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோவை. முருகன், ஊா் முக்கியஸ்தா்கள், இளைஞா்கள் பலா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...