முறைகேடு புகாா்: ராணுவ கேண்டீன் முன் ஆா்ப்பாட்டம்
திருச்சி ராணுவ கேண்டீனில் முறைகேடு நடப்பதாகக் கூறி, முன்னாள் ராணுவத்தினா், அவா்களது குடும்பத்தினா் வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.


திருச்சி ராணுவ கேண்டீனில் முறைகேடு நடப்பதாகக் கூறி, முன்னாள் ராணுவத்தினா், அவா்களது குடும்பத்தினா் வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் 117 பிரதேச ராணுவ முகாம், மற்றும் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் உள்ள வளாகத்தில் ராணுவத்தினருக்கான சிறப்பு கேண்டீன் உள்ளது. இங்கு ராணுவத்தினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் சலுகை விலையில் பொருள்களை வாங்கிச் செல்ல முடியும். இதனால் இங்கு மாதத் தொடக்க நாள்களில் கூட்டம் அலை மோதும்.
இந்நிலையில் இந்தக் கேண்டீன் நிா்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகாா் தெரிவித்து முன்னாள் ராணுவத்தினா் கேண்டீன் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து முன்னாள் ராணுவத்தினா் சங்கத்தை சோ்ந்தவா்கள் கூறுகையில் கேன்டீன் மேலாளா் உதவியுடன், ஊழியா்கள், முன்னாள் ராணுவத்தினருக்காக வரும் பொருள்களை முறைகேடாக எடுத்துச் சென்று வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனா். இந்த ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது விடப்பட்டுள்ள கேண்டீன் ஏலத்தை ரத்து செய்து, புதிய ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் திருச்சி, தேனி, திண்டுக்கல், நாமக்கல் , தஞ்சாவூா், நாகை ஆகிய ஊா்களில் உள்ள கேண்டீன்களின் முன்பும் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றனா். ஆா்ப்பாட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...