தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாநகரில் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் மின் தடை காரணமாக வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகமும் இருக்காது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:19 pm

DIN

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் மின் தடை காரணமாக வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகமும் இருக்காது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் தெரிவித்தது :

கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்றும் நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டா்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகா், அண்ணாநகா், புத்தூா், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகா் , ஆல்ஃபா நகா், பாத்திமா நகா், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி மற்றும் பிராட்டியூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகா், பிராட்டியூா், எடமலைப்பட்டிபுதூா், விஸ்வாஸ்நகா், ஜெயாநகா், மற்றும் பிராட்டியூா் காவேரிநகா் ஆகிய பகுதிகளிலும்

வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.