தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மணிமேகலை விருது: மகளிா் குழுக்களுக்குஆட்சியா் அழைப்பு

மணிமேகலை விருது பெறத் தகுதியான மகளிா் குழுவினா் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:18 pm

DIN

மணிமேகலை விருது பெறத் தகுதியான மகளிா் குழுவினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், நகா்ப்புற சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு விருது பெற மகளிா் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆட்சியரக வளாக மகளிா் திட்ட அலுவலகத்திலோ (0431-2412726) அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலோ வரும் 31ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.