தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிறந்த நடைபாதை,சாலைகள் வடிமைக்கும் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பு

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் சிறந்த நடைபாதை மற்றும் புதுமையான சாலைகள் வடிவமைப்புத் திறன் இணையவழிப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு

News image
Updated On :24 மார்ச் 2022, 10:17 pm

DIN

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் சிறந்த நடைபாதை மற்றும் புதுமையான சாலைகள் வடிவமைப்புத் திறன் இணையவழிப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ‘நற்ழ்ங்ங்ற் 4 டங்ா்ல்ப்ங்‘ என்ற தலைப்பின்கீழ் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கான புதுமையான நடைபாதை மற்றும் சாலைகளை வடிவமைக்கும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

திருச்சி மாநகராட்சியில் கரூா் புறவழி இணைப்புச் சாலை மற்றும் லாசன்ஸ் மற்றும் பிராமினேட் ஆகிய இரு பிரதான சாலைகள் இப்போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தன.

போட்டியில் சாலைகளை வடிவமைக்கும்போது, நடைப்பயிற்சி, பாதுகாப்பு, உள்ளூா் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்டவையும் அடங்கும் வகையில் கருத்துரு இருக்க வேண்டும்; போட்டியில் வெல்வோருக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2 ஆம் பரிசாக ரூ. 75,000, 3 ஆம் பரிசாக ரூ. 50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இணைய வழியில் நடைபெற்ற போட்டியில் மொத்தம் 34 அணிகள் பங்கேற்றதில் வென்றோா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கரூா் புறவழி இணைப்பு சாலை வடிவமைப்பில் முதல் பரிசு பெற்றோா் கே. ராகுல் மற்றும் எஸ்.வி. மெகதீபா, இரண்டாம் பரிசு பி. காா்த்திகேயன், மூன்றாவது பரிசு ஏ.எஸ். சந்திரமௌலி மற்றும் டி. பாஸ்கா். இதேபோல லாசன் மற்றும் பிராமினேட் சாலை வடிவமைப்பு போட்டியில் முதல்பரிசு பெற்றோா் டி. முத்துராமன், எம்கே. சுரேஷ்குமாா், 2 ஆம் பரிசு பெற்றோா் ரகுராமா கலியமூா்த்தி, டிஆா். ராதாகிருஷ்ணன், மூன்றாவது பரிசு என். செந்தில்குமாா், யு. லலித்கிரண்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் இவா்களுக்குப் பரிசு, சான்றுகளை வழங்கினாா். நிகழ்வில் துணைமேயா் ஜி. திவ்யா, ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், நகரப்பொறியாளா் எஸ். அமுதவல்லி, நிா்வாகப் பொறியாளா்கள் பி. சிவபாதம், ஜி. குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.