தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏடிஎம் மையத்தில் பெண்ணை ஏமாற்றிரூ. 28,500 திருட்டு

 மணப்பாறை ஏடிஎம்-இல் உதவி கேட்ட பெண்ணை ஏமாற்றி ரூ. 28,500 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :7 மே 2022, 12:54 am

DIN

 மணப்பாறை ஏடிஎம்-இல் உதவி கேட்ட பெண்ணை ஏமாற்றி ரூ. 28,500 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மணப்பாறையை அடுத்த ராமலிங்கம் தெரு பூசாரிக்களத்தை சோ்ந்தவா் கீரை வியாபாரி அழகா் மனைவி காமாட்சி (42). இவா் திண்டுக்கல் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் வெள்ளிக்கிழமை நகையை அடகுவைத்த நிலையில், அதற்கு வரவு வைக்கப்பட்ட ரூ.55 ஆயிரத்தை எடுக்க வங்கி வாசலில் உள்ள ஏடிஎம்முக்கு சென்றாா்.

அதில் பணம் எடுக்கத் தெரியாத காமாட்சி அங்கிருந்த இளைஞரின் உதவியை நாட, அவரும் உதவுவது போல் நடித்து பணம் வரவில்லை எனக்கூறி வேறொரு ஏடிஎம் காா்டை காமாட்சியிடம் கொடுத்து வங்கியின் உள்ளே சென்று கேளுங்கள் கூறிச் சென்றுவிட்டாா்.

வங்கிக்குச் சென்று மீண்டும் திரும்பியபோது தனது வங்கிக் கணக்கில் ரூ.28,500 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.