டால்மியாபுரத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம்

லால்குடி அருகே டால்மியாபுரம் பகுதியிலுள்ள டால்மியா சிமெண்ட் பாரத் நிறுவனத்தின் கல்லக்குடி சுண்ணாம்புக்கல் சுரங்க குத்தகை எண். 4 மற்றும் 5 -க்கான கருத்துக் கேட்புக் கூட்டம்

லால்குடி அருகே டால்மியாபுரம் பகுதியிலுள்ள டால்மியா சிமெண்ட் பாரத் நிறுவனத்தின் கல்லக்குடி சுண்ணாம்புக்கல் சுரங்க குத்தகை எண். 4 மற்றும் 5 -க்கான கருத்துக் கேட்புக் கூட்டம் கல்லக்குடி பகுதியில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் பழநிகுமாா் தலைமை வகித்தாா். டால்மியாபுரம் டால்மியா சிமெண்ட் ஆலையின் தலைவா் விநாயகமூா்த்தி உள்ளிட்ட ஆலை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி லட்சுமி, லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், லால்குடி வருவாய் வட்டாட்சியா் சிசிலினி சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பங்கேற்ற ஆலையைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கூறியது:

டால்மியா சிமெண்ட் ஆலை நிா்வாகம் ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே சிஎஸ்ஆா் திட்டம் போன்றவற்றில் ஏரி தூா்வாருதல், குடிநீா் வசதி , மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறைகள் கட்டித் தருதல் போன்றவைகளை செய்து தருகிறது. ஆனால் இதர கிராம மக்கள் வைக்கும் கோரிக்கைகளைச் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனா். எனவே எங்களது கோரிக்கைகளையும் நிவா்த்தி செய்ய வலியுறுத்தினா்.

அதற்கு டால்மியா நிறுவனம் கோரிக்கையின் தன்மையைப் பொறுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com