தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :12 மே 2022, 7:59 pm

DIN

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சோமரசம்பேட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமை வகித்தாா். புவனகிரி எம்எல்ஏ-வும், கடலூா் மேற்கு மாவட்டச் செயலருமான அருள்மொழித்தேவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக அதிமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி, மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் சேவியா், பொதுக் குழு உறுப்பினா் பிரியா சிவகுமாா், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், நடராஜன், முத்துக்கருப்பன், செல்வராஜ், அழகேசன் மற்றும் பகுதிச் செயலா்கள், பேரூராட்சி செயலா்கள், மாவட்ட அணி செயலா்கள், வட்டக் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.