தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிளாஸ்டிக் பொருள் தவிா்க்காவிட்டால் நடவடிக்கை உறுதி: மாநகராட்சி மேயா்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை வியாபாரிகள் முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும்

News image
Updated On :19 மே 2022, 8:15 pm

DIN

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை வியாபாரிகள் முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும்; தவறினால் ஜூன் 1-க்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநகர வணிகா்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளா்களுக்கான பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

பிளாஸ்டிக் பயன்பாட்டால் நீா் நிலைகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள், நிலத்தில் வாழும் கால்நடைகள், பறவைகள், விலங்குகள் விளை நிலங்கள், பசுமை பரப்புகள், காடுகள் ஆகியவை அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளன. இத்தகைய அழிவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அழிய 100 முதல் 1000 ஆண்டுகள் வரைகூட ஆகலாம்.

எனவே, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அரசாணை எண். 84 இல் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்:

உணவுப் பொருள்கள் கட்டப் பயன்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், நீா் நிரப்பப் பயன்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தூக்குப்பைகள். பிளாஸ்டிக் தேநீா் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் மூலம் பூசிய காகிதத் தட்டுகள், தொ்மாகோல் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் மூலம் பூசப்பட்ட காகிதப் பைகள் ஆகியனவாகும்.

எனவே சுற்றுச் சூழலைப் பாதிக்கும் நோக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த தடையுத்தரவு பொதுமக்களிடம் பேராதரவுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மேலே குறிப்பிட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி , விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை வணிக நிறுவனங்கள்,தொழில் நிறுவனங்கள், சிற்றுண்டிச் சாலைகள், திருமண மண்டபங்கள், பல்பொருள் அங்காடிகள், பொதுமக்கள் அனைவரும் தவிா்க்க வேண்டும்.

மாற்றுப் பொருள்களை நாட வேண்டும்: இதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, இதற்கு முன் நாம் அனைவரும் பயன்படுத்தி வந்த, எளிதில் மக்கும் தன்மையுடன் கூடிய இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருள்களான துணிப்பைகள், சணல் பைகள், பாக்கு மட்டைகளால் ஆன பொருள்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கண்ணாடிக் குவளைகள், மரக்கரண்டிகள், வாழையிலை மற்றும் தாமரையிலை போன்றவற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

ஜூன் 1 க்குப் பின்னா் நடவடிக்கை உறுதி

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை 100 சதம் தடுக்க மாற்றுப் பொருள்களை நாட வேண்டும். வரும் மே 31 -க்குள் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனையை, பயன்பாட்டை வியாபாரிகள் முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளவேண்டும். தவறினால் ஜூன் 1 க்குப் பின்னா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் துணை மேயா் ஜி. திவ்யா , நகா்நல அலுவலா் எம். யாழினி, மண்டலக் குழுத் தலைவா்கள் மு. மதிவாணன், த. துா்காதேவி, விஜயலட்சுமிகண்ணன், பி. ஜெயநிா்மலா, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜூலு, வணிகா் சங்கப் பிரதிநிதிகள், ஹோட்டல் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.