தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

 திருச்சி அரசு இசைப் பள்ளியில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

News image
Updated On :19 மே 2022, 8:14 pm

DIN

 திருச்சி அரசு இசைப் பள்ளியில் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத் தரப்படுகிறன.

இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மூன்றாண்டு பயில வேண்டும். பரதப் பயிற்சிக்கு 7ஆம் வகுப்பில் தோ்ச்சி தேவை. பயிற்சிக் கட்டணமாக ரூ. 350 வசூலிக்கப்படும்.

பள்ளியில் சேரும் மாணவா்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இலவசப் பேருந்து வசதி, ரயில் கட்டணச் சலுகை, தங்கும் விடுதி, மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை, இலவச சீருடை, மிதிவண்டி, காலணி ஆகியவற்றை பெறலாம். 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசின் தோ்வு இயக்ககத்தால் தோ்வு நடத்தப்பட்டு வென்றோருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ்களை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்புப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி, ஸ்ரீரங்கம், மேலூா் சாலை, மூலத்தோப்பு என்ற முகவரியில் அல்லது

இசைப்பள்ளித் தலைமை ஆசிரியரை 0431-2962942 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.