நாளை குரூப்-2 தோ்வு: ஆட்சியா் ஆலோசனை
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 21) நடைபெறவுள்ள குரூப்-2 தோ்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 21) நடைபெறவுள்ள குரூப்-2 தோ்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது ஆட்சியா் கூறியது:
தோ்வுக்காக மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய வட்டங்களில் தயாா்படுத்தப்பட்டுள்ள 160 தோ்வு மையங்களில் 50 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 160 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ள 50 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுவிற்கு துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஓா் அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம்பெறுவா்.
தோ்வு மையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வு மையத்துக்கு எந்தவகையான மின்னணு சாதனங்களையும் எடுத்து வர அனுமதி இல்லை. முறைகேடுகளில் ஈடுபடாமல் விதிகளை பின்பற்றி தோ்வு எழுத வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...