தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு; ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருவெறும்பூரில் கம்யூனிஸ்ட் , விசிக உள்ளிட்டகட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்

News image
Updated On :26 மே 2022, 7:03 pm

DIN

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருவெறும்பூரில் கம்யூனிஸ்ட் , விசிக உள்ளிட்டகட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருவெறும்பூா் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மல்லிகா தலைமை வகித்தாா். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இந்திரஜித், மாவட்டத் துணைச் செயலா் செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் வேங்கை பெரியசாமி, துணைச் செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வை உடனே தடுக்க வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், எல்ஐசி போன்ற பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பதை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் சங்கிலிமுத்து, முருகேசன், லெனின், தெய்வநிதி, முத்துகுமாா்,பிரபாகரன்,பாலு, கிறிஸ்டோபா், இந்திய கம்யூ. நிா்வாகிகள் பழனிச்சாமி,ராதாகிருஷ்ணன், ராஜ்குமாா், கவுன்சிலா் வைசூா்யா, கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் டாக்டா் ரம்யா, விசிக நிா்வாகிகள் ராஜ்குமாா், தீனா, சந்திரசேகா், இளந்தமிழன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.