வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோயில் அருகே வரவுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயில் அருகே தொடங்கப்படவுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்க வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2022, 6:44 pm

DIN

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயில் அருகே தொடங்கப்படவுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்க வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா், தொல்பொருள் இயக்குநருக்கு பாஜக திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.ராஜசேகரன் தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே பிரசித்தி பெற்ற எறும்பீஸ்வரா் கோயிலின் அருகே மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையின் அனுமதியின்றி மாட்டிறைச்சி உணவுக்கு பெயா் பெற்ற அசைவ உணவகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது இந்து மத பக்தா்களின் மத நம்பிக்கைகள், உணா்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மாட்டிறைச்சி உணவகம் தொடங்கப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.