மணப்பாறையில் வாடகைக் கார் உரிமையாளர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாடகைக் கார் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஞாயிற்றுக்கிழமை அவரது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட ஜானகிராமன்.
கைது செய்யப்பட்ட ஜானகிராமன்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி விடியற்காலை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வாடகைக் கார் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஞாயிற்றுக்கிழமை அவரது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மணப்பாறை கோவிந்தராஜபுரம் பகுதியில் வசித்து வந்த குணசீலன் தனது 7 மகன்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது 4-வது மகன் லெட்சுமிநாராயணன்(31), சொந்தமாக வாடகை கார்கள் வைத்துள்ளார். இவர் தான் குடும்ப வரவு செலவுகளை அதிக அளவில் அக்கறையுடன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு வீட்டிற்கு வந்து தனது அறையில் தனியாக உறங்கிய லெட்சுமிநாராயணன், காலையில் கழுத்து மற்றும் பின் தலை பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கோண்ட மணப்பாறை காவல்துறையினர், லெட்சுமிநாராயனன் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த லெட்சுமிநாராயணன் சகோதரர் ஜானகிராமன்(29) நடவடிக்கையில் சந்தேக ஏற்படவே அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கோண்டனர். 

விசாரணையில், சகோதரர்களுக்குள் குடும்ப வரவு செலவு பார்ப்பதில் அவ்வப்போது தகராறு ஏற்படுவதும், ஏற்கனவே லெட்சுமிநாராயணன் சகோதரர்களால் தாக்கப்பட்டு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், சம்பவத்தன்று தனியாக உறங்கிக்கொண்டிருந்த லெட்சுமிநாராயணன் அறைக்கு சென்ற ஜானகிராமன், முன் விரோதம் காரணமாக கத்திரிகோல் கொண்டு லெட்சுமிநாரயணன் கழுத்தில் குத்தப்பட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஜானகிராமனை கைது செய்த மணப்பாறை காவல்துறையினர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com