மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜனவரி 2023, 6:52 am

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிபட்டி பாப்பனம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (35), கணேசன் (28) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம், திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிர்ப்புறம் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதை வழியாக தனது அண்ணன் மகள்களை பள்ளிக்கு விட வந்த நாகமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த பாலாஜியின் (35) இருச்சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியது. 

இதில் படுகாயமடைந்த 5  பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி மற்றும் காளிமுத்து ஆகிய இருவரும் பலியாகினர். மற்ற மூவரும் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து மணிகண்டன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.