கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணப்பாறை: 100 அடி கிணற்றில் விழுந்த பசு மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாடு புதன்கிழமை தீயணைப்பு துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

News image

மீட்கப்பட்ட பசு.

Updated On :12 ஜூலை 2023, 8:42 am

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாடு புதன்கிழமை தீயணைப்பு துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

மணப்பாறை அடுத்த  மருங்காபுரி ஒன்றியம் தொப்பிலாம்பட்டி சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(38). இவரது பசுமாடு புதன்கிழமை காலை அவரது தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்துள்ளது. அப்போது  எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தண்ணீரில் பசு மாடு தத்தளித்தது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாட்டினை கயிறு கட்டி, ஜேசிபி டிராக்டர்கள் உதவியுடன் மாட்டினை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.