/

மனவளா்ச்சிக் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:46 am

Din

திருச்சி மாவட்டம் துறையூரில் மனவளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

துறையூா் பெட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் தி. விஜயன் (60), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு 36 வயதுடைய மனவளா்ச்சிக் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின்பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக எம்.கே. ஜாகீா் உசேன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.என். ஸ்ரீவத்ஸன், குற்றவாளி விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.