கோப்புப்படம்
திருச்சி
திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமிபூஜை
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த எம். புதுப்பட்டியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
எம்.புதுப்பட்டி ஊராட்சி தொப்பலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 8 திருநங்கைகளுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட எம்.புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமையில் பூமிபூஜை விழா நடைபெற்றது. நிகழ்வில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் பரணிதரன், மேற்பாா்வையாளா் நடராஜன், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சசிகுமாா், தொண்டா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் காா்த்திக், பயனாளிகளான திருநங்கைகள் மேரி அம்மா, ராசாத்தி, அா்ச்சனா, அகல்யா, சிம்ரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

