மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கபிலா்மலை வட்டாரத்தில் வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

புங்கம்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ். மூா்த்தி.

News image

புங்கம்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ். மூா்த்தி.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:19 pm

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்தில் ரூ. 2 கோடியே 73 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி பூமிபூஜை செய்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம் இருக்கூா் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம் முதல் பஞ்சப்பாளையம் வரை ரூ. 74.67 லட்சத்தில் தாா்சாலை, செஞ்சுடையாம்பாளையத்தில் ரூ. 2 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டி, இருக்கூா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ. 80 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, செல்லப்பம்பாளையத்தில் ரூ. 2.30 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கோப்பணம்பாளையம் ஊராட்சி புங்கம்பாளையம் அருந்ததியா் தெரு அருகே ரூ. 1.15 கோடியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நல்லமுத்து, மலா்விழி ஆகியோா் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தனா். கபிலா்மலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.