மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:18 pm

Syndication

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, சாலைப் பணிகளை பூமிபூஜை செய்து எம்எல்ஏ ஒய். பிரகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சூளகிரியை அடுத்த மாதா்சனப்பள்ளி, எம்.தொட்டி, தியாகரசனப்பள்ளி, சிகரலப்பள்ளி ஆகிய கிராமங்களில் ரூ. 2 கோடியே 76 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா்கள் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி, கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் எம்எல்ஏ பிரகாஷுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ முருகன், இளைஞரணி மாநில துணை செயலாளா் சீனிவாசன், சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளா் பாக்கியராஜ், வடக்கு ஒன்றிய செயலாளா் நாகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனிசந்திரன், முருகேசன், என்பிஆா். ராமச்சந்திரன், மல்லேஷ், சாதனஹள்ளி, ரவி, ராமன், குமாா், சீதாராமன், சீனிவாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

படவரி...

தியாகரசனப்பள்ளியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா் ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.