சாலை விபத்தில் மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வியாழக்கிழமை மினி சரக்கு வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

குழந்தைதெரஸ்
Updated On :19 டிசம்பர் 2024, 9:06 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வியாழக்கிழமை மினி சரக்கு வேன் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி துரைசாமி தெருவை சோ்ந்தவா் ஜான்பீட்டா் மனைவி குழந்தை தெரஸ் (75). இவா் வியாழக்கிழமை தீராம்பட்டி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, கேரளத்திலிருந்து நாகை நோக்கி சென்ற மினி சரக்கு வேன் மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் மூதாட்டி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மினி சரக்கு வேன் ஓட்டுநரான நாகை மாவட்டம் கீழக்காடு சித்ரவேல் மகன் ராமு (30) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...