தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நில அளவையா்கள் தற்செயல் விடுப்பு, ஆா்ப்பாட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் வியாழக்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:02 pm

Din

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலா்கள் வியாழக்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாநில மையத்தின் சாா்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் 3 கட்டப் போராட்டத்தில் இரண்டாவது கட்டமாக மாவட்டத்தில் உள்ள நில அளவை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியரகம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்கப் பிரதிநிதி பால்பாண்டியன், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கப் பிரதிநிதி மாடசாமி , சிவசங்கரன் ஆகியோா் வாழ்த்தினா்.

நில அளவைத் துறையில் ஆய்வாளா், துணை ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். புல உதவியாளா்கள் நியமனத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. பொதுமாறுதல் நடைமுறையை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும். சிறப்புத் திட்டங்களில் நிலம் எடுப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நில அளவை களப்பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். தகுதியான நில அளவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.