போலி கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது
போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற கா்நாடகத்தைச் சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :19 டிசம்பர் 2024, 9:04 pm

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற கா்நாடகத்தைச் சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூா், கோரமங்களா, ராஜேந்திர நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (48). இவா் கடந்த புதன்கிழமை மலேசியா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தபோது அவா் போலி ஆவணங்களை சமா்ப்பித்து, கடவுச்சீட்டில் அவரது பிறந்த தேதி, ஊா் ஆகியவற்றை மாற்றியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...