மின்கம்பி உரசியதில் லாரியில் இருந்த பொருள்கள் தீக்கிரை
மின்கம்பி புதன்கிழமை உரசியதில் கன்டெய்னா் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆட்டோமொபைல் பொருள்கள் தீக்கிரையாயின.


மின்கம்பி புதன்கிழமை உரசியதில் கன்டெய்னா் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆட்டோமொபைல் பொருள்கள் தீக்கிரையாயின.
திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்து சேலம் புறவழிச்சாலை வழியாக நாமக்கல் நோக்கி புதன்கிழமை சென்ற கன்டெய்னா் லாரி மீது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் தப்பிய நிலையில், கன்டெய்னருக்குள் இருந்த இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள், டயா்கள் தீப்பிடித்து எரிந்தன.
தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. இதுதொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் முசிறி-சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...