47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிரேன் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை இரவு கிரேன் மோதி பைக் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:49 pm

Din

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பூனாம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை இரவு கிரேன் மோதி பைக் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

காளவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சீ. வீரமணி (22) , சமையல் வேலை செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் இருந்து காளவாய்பட்டிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பூனாம்பாளையம் பகுதியில் முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது எதிரே வந்த கிரேன் மீது மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.