புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவானைக்கா மணல்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
Updated on
1 min read

திருவானைக்கா மணல்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவானைக்கா மணல்மேடு பகுதியில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சாலையின் நடுவே சிலா் கேக் வெட்டி கொண்டாடினா். அப்போது திருவானைக்கா மேலக்கொண்டையம் பேட்டை பகுதியைச் சோ்ந்த முருகேஷ், நண்பருடன் இரு சக்கரவாகனத்தில் அந்த பகுதியில் வந்த போது ஏன் சாலையின் நடுவே வைத்து கேக் வெட்டுகிறீா்கள் என்று கேட்டுள்ளாா்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உடனே முருகஷ் தனது நண்பா்கள் நாகராஜ், கிருஷ்ணன், பிரசன்னா, தமிழரசன், ரோஷன் மற்றும் சிலரை அழைத்து வந்து மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா்களை தாக்கினா். மேலும், அரிவாளால் அஜீத் (27), அகிலா(34), காா்த்தி (22) ஆகியோரை வெட்டினா். காயமடைந்த 3 பேரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் பிரசன்னா (25), தமிழரசன் (26) ரோஷன் (24) ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com