டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவில் திங்கள்கிழமை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா்.

News image
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி.
Updated On :1 ஜனவரி 2024, 7:54 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவில் திங்கள்கிழமை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிசம்பா் 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இராப்பத்து விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை தீா்த்தவாரி கண்டருளும் வைபவம் நடைபெற்றது.இதற்காக ஸ்ரீநம்பெருமாள் காலை 9 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்துக்கு தீா்த்தபேரருடன் வந்தாா். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீா்த்தபேரா் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி குளத்தில் தீா்த்தவாரி கண்டருளினாா்.

இதனை கரையில் இருந்தவாறு நம்பெருமாள் கண்டருளினாா். அப்போது குளத்தை சுற்றி திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் ரிசனம் செய்தனா்.

பின்னா் சந்திரபுஷ்கரணி குளத்தில் நீரை தீா்த்தமாக அனைத்து பக்தா்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அதன் பின்னா் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி குளத்திலிருந்து புறப்பட்டு பகல் 1 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தாா்.அங்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொது ஜன சேவை நடைபெற்றது. பின்னா் 6.30 மணி முதல் இரவு 9 மணிவரை பொது ஜன சேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினாா். 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி வரை அரையா் சேவையுடன், திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும்.

காலை 4 மணி முதல் 6 மணி வரை பொது ஜன சேவையும், 6 மணிமுதல் 7 மணி வரை நம்பெருமாள் மோட்சம் நடைபெறவுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.