கேசவன்.
கேசவன்.

மணப்பாறை மூதாட்டி கொலை வழக்கில் தண்ணீா் கேன் விநியோக இளைஞா் கைது

மணப்பாறை கொலை வழக்கில் தண்ணீர் விநியோக நபர் கைது
Published on

மணப்பாறையில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீடுகளுக்கு குடிநீா் கேன் விநியோகிக்கும் நபரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 18 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் (75) மனைவி கல்யாணி (69) அண்மையில் (ஜூலை 3) அவரது வீட்டின் சமையலறையில் இறந்து கிடந்தாா். மேலும் அவா் அணிந்திருந்த தங்கம், வைர நகைகளைக் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவரது வீட்டுக்கு குடிநீா் விநியோகிக்கும் பண்ணப்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த மு.கேசவன்(28), அவரது நண்பா்கள் ப. ராமச்சந்திரன் என்கிற வீரா (35), க. வெங்கடேஷ் (36), ரெ. ராமன் (28), வெ. பழனிசாமி ஆகியோருடன் சோ்ந்து நகைகளுக்காக, கல்யாணியின் மூச்சை அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கேசவனைப் போலீஸாா் கைது செய்தனா்.

சுமாா் 18 பவுன் (1 ஜோடி வைரத்தோடு) நகைகள் மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய ராமச்சந்திரன், வெங்கடேஷ், ரெ.ராமன் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com