கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, கோவைக்கு 15 புதிய பேருந்துகள்: அமைச்சா்கள் தொடக்கிவைப்பு

15 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

News image

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிய அரசுப் பேருந்துகளை சனிக்கிழமை தொடக்கிவைத்த அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

Updated On :20 ஜூலை 2024, 9:59 pm

Din

திருச்சி: திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, கோவைக்கு, கரூரிலிருந்து ராமேசுவரம் என மேலும் 15 புதிய பேருந்துகளின் (பிஎஸ் 6 ரகம் )இயக்கத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்துக்கு 90 புதிய பேருந்துகள் வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி ஏற்கெனவே 65 பேருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், 15 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.

இந்தப் பேருந்துகள் திருச்சி-சென்னை-மாதவரம், துவாக்குடி-திருச்சி-சென்னை மாதவரம், இளங்காக்குறிச்சி-சென்னை மாதவரம், மணப்பாறை-திருச்சி-கோவை, துவரங்குறிச்சி-திருச்சி-கோவை, துறையூா்-ஈரோடு-கோவை, துறையூா்-திருச்சி-கோவை, உப்பிலியபுரம்-திருச்சி-மதுரை, கரூா்-காணியாளம்பட்டி, கரூா்-ராமேசுவரம், கரூா்-வேலூா், கரூா்- திருமுக்கூடலூா் ஆகிய வழித்தடங்களில் சனிக்கிழமை முதல் சேவையைத் தொடங்கின.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், திமுக நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.