திருச்சி
துவரங்குறிச்சியில் நாளை மின்தடை
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாடாா்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக் கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, வெங்கடநாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டப்புளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் தியாகராஜன் தெரிவித்தாா்.
