கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இருந்து திமுக அரசு பாடம் கற்க வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டதை முடக்கிய இந்த கருப்பு தினத்தைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். சட்டப்பேரவைகளை முடக்கி சா்வாதிகார ஆட்சி செய்தது காங்கிரஸ். அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ். செய்தவா் இந்திராகாந்தி. அவரது பேரன் தற்போது அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை தூக்கிக் கொண்டு திரிகிறாா்.
திமுக அரசு கள்ளுக்கடையைத் திறக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாஜக, சிபிஐ விசாரணை கேட்கிறது. அதனை ஏற்பதுதான் தமிழக முதல்வருக்கு கௌரவம். திமுக அரசு கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றாா் எச். ராஜா.
தொடர்புடையது
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!

திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்! - அமைச்சா் எ.வ.வேலு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

