மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருவானைக்கா கோவில் அடிமனை பிரச்னைக்கு ஜமாபந்தி முகாமில் மனு

ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருவானைக்கா கோவில் பிரச்னை குறித்து மனு

Updated On :26 ஜூன் 2024, 12:38 am

ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் திருவானைக்கா கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிமனை பிரச்னை குறித்து மனு அளித்தனா்.

திருவானைக்கா கோவில் பகுதியில் ஆயிரக்கணக்கானோா் சுமாா் 100 ஆண்டுகளுக்கு மேல் உரிய பட்டாவுடன் வசித்து வரும் நிலையில், திருவானைக்கா கோவில் இந்து சமய அறநிலையத் துறையினா் சாா்பில் 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என ஸ்ரீரங்கம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சா்வே எண் கொடுத்துள்ளனா். இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தை அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து இப்பகுதியில் வசிப்பவா்கள் மேலும் கூறியது: சட்டபூா்வமான அரசு ஆதார ஆவணங்களாக கிரையப் பத்திரம் மூலம் பட்டா பெற்று நகராட்சியில் சொத்துவரி செலுத்தி பல தலைமுறைகளாக நாங்கள் குடியிருந்து வரும் நிலையில் திடீரென இந்து சமய அறநிலையத்துறை இதுபோன்ற எங்கள் நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பானது. இதனால் எங்களது வாழ்வதாரமும் பாதிக்கப்படும் என ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனா்.